Laws Enacted Today - International Day for Monuments and Sites (World Heritage Day) - Maharshi Karve, Educator, Pioneer of Widows Education, Social Reformer - George Herbert Hitchings, American Doctor, Nobel Laureate - Tantia Tope, Commander of the Indian Army - G.Subramania Iyer, Freedom Fighter - Albert Einstein, Renowned Physicist - Arrival of Titanic Ship Survivors - April 18

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Laws Enacted Today - The International Day for Monuments and Sites (World Heritage Day) - Maharshi Karve, Educator, Pioneer of Widows Education, Social Reformer - George Herbert Hitchings, American Doctor, Nobel Laureate - Tantia Tope,  Commander of the Indian Army - G.Subramania Iyer, Freedom Fighter - Albert Einstein, Renowned Physicist - Arrival of Titanic Ship Survivors."


The criminal procedure (identification) act, 2022 :

✒️It was enacted on 18th April 2022 & came into force on 4th August 2022, to authorise for taking measurements of convicts and other persons for the purposes of identification and investigation in criminal matters and to preserve records and for matters connected therewith and incidental thereto.


The Parliamentary Proceedings (Protection of Publication) Act, 1977 :

✒️It was enacted on 18th April 1977 & as per sec 1(3) It shall be deemed to have come into force on 25th March, 1977, to protect the publication of reports of proceedings of Parliament.


The Marine Insurance Act, 1963 :

✒️It was enacted on 18th April 1963 & came into force on 1st August 1963, to codify the law relating to marine insurance.


The Rubber Act, 1947 :

✒️It was enacted & enforced on 18th April 1947, to provide for the development under the control of the Union of the rubber industry.


உலக பாரம்பரிய தினம் - The International Day for Monuments and Sites also known as World Heritage Day :

✒️Every country, every region and every race in the world has different types of cultural monuments and this day is observed every year on 18th April to create awareness about its preservation.

✒️உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1982ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் தேதி சர்வதேச நினைவிடங்கள் தினமாக கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டே யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது.


Maharshi Karve - Social Reformer

மகரிஷி கர்வே - Dhondo Keshav Karve  (Maharshi Karve) - Educator, Pioneer of Widows Education - Social Reformer & Advocated Widow Remarriage (He Himself Married a Widow) - Founded the First Women's University in India :

✒️Maharshi Karve, who worked for women's development, was born on April 18, 1858 in the village of Murud in the Ratnagiri district of Maharashtra. Realizing that conducting widow marriages and campaigning for them alone would not be a permanent solution for them, he decided that it was necessary to educate them and make them stand on their own feet, and for this he started an organization called "Anath Balikashram". He decided to start a university for women. Mahatma Gandhi also supported his activities. He was awarded Padma Vibhushan in 1955. He was awarded the Bharat Ratna in 1958 at the age of one hundred. He was fondly called as Maharishi Karve, such a great activist passed away on 9th November 1962.

✒️மகளிர் மேம்பாட்டுக்கு பாடுபட்ட மகரிஷி தோண்டு கேசவ் கர்வே 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் விதவைத் திருமணங்கள் நடத்துவதும், இதுகுறித்து பிரச்சாரம் செய்வதும் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு கல்வி கற்பித்து, சொந்தக் காலில் நிற்க வைப்பது அவசியம் என தீர்மானித்து, இதற்காக அனாத் பாலிகாஷ்ரம் என்ற அமைப்பை தொடங்கினார். பெண்களுக்காக பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்தார். இவருடைய செயல்களுக்கு மகாத்மா காந்தியும் ஆதரவு அளித்து வந்தார். 1955ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார். 1958ஆம் ஆண்டு நூறாவது வயதில் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மகரிஷி கர்வே என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் 1962ஆம் ஆண்டு நவம்பர் 9ந் தேதி மறைந்தார்.


ஜார்ஜ் ஹிட்சிங்ஸ் - George Herbert Hitchings  - American Doctor -Nobel Laureate (who shared the 1988 Nobel Prize in Physiology or Medicine with Sir James Black and Gertrude Elion "for their discoveries of important principles for drug treatment", Hitchings received specifically for his work on chemotherapy) :

✒️American physician George Herbert Hitchings, who won the Nobel Prize for chemotherapy research, was born on April 18, 1905 in Hoquim, Washington, USA. In 1944, he was researching 2,6-diaminopurine and p-chlorophenoxy-2,4-diaminopyrimidine, which were used in the treatment of leukemia. His group has published key principles related to drug products for chemotherapy and immunotherapy for various therapies. He was jointly awarded the Nobel Prize in 1988 for discovering these theories. He passed away on February 27, 1998.

✒️கீமோதெரபி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1905ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் என்ற பகுதியில் பிறந்தார். 1944ஆம் ஆண்டு இவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2,6-டைஅமினோப்யூரின் (2,6-Diaminopurine) மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டைஅமினோ பைரிமிடின் (p-chlorophenoxy-2,4-diaminopyrimidine) உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்து வந்தார். கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை அவருடைய குழு வெளியிட்டது. இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக அவர்களுடன் கூட்டாக 1988ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 27ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1859ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே மறைந்தார் - On April 18, 1859, the commander of the Indian Army, Tantia Tope was passed away.


🌟 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் ஜி.சுப்பிரமணிய ஐயர் மறைந்தார் - On April 18, 1916, freedom fighter G.Subramania Iyer was passed away.


🌟 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கோட்பாட்டு இயற்பியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைந்தார் - Albert Einstein, the father of theoretical physics, died on April 18, 1955.


🌟 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர் - On April 18, 1912, 705 survivors of the sinking of the Titanic Ship arrived in New York.


🖊 I hope you may have learned little things about the following ;

Laws Enacted Today - The International Day for Monuments and Sites (World Heritage Day) - Maharshi Karve, Educator, Pioneer of Widows Education, Social Reformer - George Herbert Hitchings, American Doctor, Nobel Laureate - Tantia Tope,  Commander of the Indian Army - G.Subramania Iyer, Freedom Fighter - Albert Einstein, Renowned Physicist - Arrival of Titanic Ship Survivors.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments