Indian Treasure-Trove Act - World Radio Day - Sarojini Naidu, Freedom Fighter, Former Governor, Poet - M.Bhakthavatsalam, Indian Independence Activist, Politician, Former Chief Minister of Tamil Nadu - Sheikh Thambi Pavalar, Renowned Tamil Poet - February 13
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Indian Treasure-Trove Act - World Radio Day - Sarojini Naidu, Freedom Fighter, Former Governor, Poet - M.Bhakthavatsalam, Indian Independence Activist, Politician, Former Chief Minister of Tamil Nadu - Sheikh Thambi Pavalar, Renowned Tamil Poet - February 13".
The Indian Treasure-Trove Act, 1878 :
✒️It was enacted and enforced on 13th February 1878 to amend the law relating to Treasure-trove.
உலக வானொலி தினம் - World Radio Day :
- ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சரோஜினி நாயுடு - Sarojini Naidu - Freedom Fighter - Former Governor - Poet :
- இந்தியாவின் 'கவிக்குயில்" என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம். இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார். இவர் எழுதிய "தி கோல்டன் த்ரஸோல்ட், தி பேர்ட் ஆப் டைம், தி ப்ரோக்கன் விங்" (The Golden Threshold, The Bird of Time", "The Broken Wing) ஆகிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார். 1925ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்திஜி இவரை செல்லமாக 'மிக்கி மவுஸ்" என்பார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இவர் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். பெண்களுக்கு பெருமை சேர்த்த சரோஜினி நாயுடு 1949ஆம் ஆண்டு மார்ச் 2ந் தேதி மறைந்தார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராக திகழ்ந்த இவரது பிறந்தநாள் இந்தியாவில் "தேசிய மகளிர் தினம்" ஆக கொண்டாடப்படுகிறது.
👉Click here to buy Sarojini Naidu Collections.
எம்.பக்தவத்சலம் - Minjur Bhakthavatsalam - Indian Independence Activist - Politician - Former Chief Minister of Tamil Nadu :
- இன்று இவரின் நினைவு தினம்!
- தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் 1897ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிறந்தார். விடுதலைப் போராட்ட காலங்களில், அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத்திறனை திறம்பட வெளிப்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார். 1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த இவர், இன்னும் இரு ஐந்தாண்டு திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம் என்று அப்போதே நம்பிக்கையுடன் கூறினார். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் எம்.பக்தவத்சலம் 1987ஆம் ஆண்டு பிப்ரவரி 13ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
Sheikh Thambi Pavalar - Renowned Tamil Poet |
🌟 1950ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தமிழ் பெரும் புலவர் செய்குத்தம்பி பாவலர் மறைந்தார் - On February 13, 1950, The Great Tamil Poet Sheikh Thambi Pavalar Passed Away.
✒️I hope you may have learned little things about the following ;
Indian Treasure-Trove Act - World Radio Day - Sarojini Naidu, Freedom Fighter, Former Governor, Poet - M.Bhakthavatsalam, Indian Independence Activist, Politician, Former Chief Minister of Tamil Nadu - Sheikh Thambi Pavalar, Renowned Tamil Poet.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.