Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Forward Contracts (Regulation) Act - Oaths Act - Prevention of Cruelty to Animals Act - Tsunami Memorial Day - Charles Babbage, Inventor - Baba Amte, Social Worker - Radium Discovery - CPI Founded - Soyuz 13 & Salyut 4 Spacecraft - Tupolev TU-144, Supersonic Aircraft - Mao Zedong, Leader - Udham Singh, Indian Revolutionary - R.Nallakannu, Freedom Fighter - Shankar Dayal Sharma, 9th President of India - Savitri, Actress - December 26."
The Forward Contracts (Regulation) Act, 1952 :
✒️It was enacted on 26th December 1952 & came into force on 24th August 1953, to provide for the regulation of certain matters relating to forward contracts, the prohibition of options in goods and for matters connected therewith.
The Oaths Act, 1969 :
✒️It was enacted & enforced on 26th December 1969, to consolidate and amend the law relating to judicial oaths and for certain other purposes.
The Prevention of Cruelty to Animals Act, 1960 :
✒️It was enacted on 26th December 1960 & came into force on 1st April 1961, to prevent the infliction of unnecessary pain or suffering on animals and for that purpose to amend the law relating to the prevention of cruelty to animals.
சுனாமி நினைவு தினம் - Tsunami Memorial Day :
✒️Today is the 20th anniversary of Tsunami tragic event, on this 26th day of December 2004, a 9.3-magnitude earthquake in the Indian Ocean triggered a tsunami that caused heavy damage in Sri Lanka, India, Indonesia, Thailand, Malaysia, and the Maldives. More than 10 thousand people died in the coastal area of Tamil Nadu due to this tsunami.
- 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சுனாமிப் பேரலையால் தமிழக கடலோரப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கோர நிகழ்வின் 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று.
சார்லஸ் பாபேஜ் - Charles Babbage - Mathematician - Inventor of First Mechanical Computer :
✒️Charles Babbage, known as the father of the computer, was born on December 26, 1791 in London. Joining Trinity University in Cambridge in 1810, he showed great talent in mathematics. He created the first computer called Analytical Engine by combining mathematics and mechanics. Charles Babbage designed the early computing engines Analytical Engine and Difference Engine. He died on 18th October 1871.
- கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
- 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.
- தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
- இவர் நியம தொடருந்துப் பாதை அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை, கலங்கரை விளக்கு ஒளி, கீறிவிச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் 1871ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி மறைந்தார்.
Baba Amte - Social Worker |
பாபா ஆம்தே - Baba Amte - Indian social worker - Advocate :
✒️Murlidhar Devidas Amte, fondly known as 'Baba Amte' was born on 26th December 1914 in the village of Hinganghat in Wardha District, Maharashtra. During the 1942 Quit India Movement, he gathered lawyers and advocated for the jailed leaders. Gandhiji used to call him a 'valiant seeker of truth'. He started a center for diagnosis and treatment of leprosy. The government gave him some land and he set up small huts there, taught handicrafts to the patients there and started a school for the blind with the profits. In 1988 he started the Bharat Jodo (Unification of India) Pada Yatra to emphasize the unity and integrity of India. He has received many national and international awards like Padma Vibhushan, Gandhi Peace Prize, Magsaysay. Baba Amte, who worked for the underprivileged till his last breath, passed away on February 9, 2008 at the age of 93.
- 'பாபா ஆம்தே' என்று அன்புடன் அழைக்கப்பட்ட முரளிதர் தேவிதாஸ் ஆம்தே 1914ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் ஹிங்கான்கட் என்ற கிராமத்தில் பிறந்தார்.
- இவர் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களுக்காக வாதாடினார்.
- காந்திஜி இவரை 'துணிவுடன் சத்தியத்தைத் தேடுபவன்' என்று அழைப்பார். இவர் தொழுநோயைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். இவருக்கு அரசு சிறிது நிலம் வழங்கியது. அங்கே சிறு குடில்களை அமைத்து, அங்குள்ள நோயாளிகளுக்கு கைத்தொழில் பயிற்சி கற்றுக்கொடுத்து, அதில் கிடைத்த லாபத்தை வைத்து பார்வையற்றோருக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
- 1988ஆம் ஆண்டு இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி பாரத் ஜோடோ (இந்தியாவை இணைத்தல்) பாத யாத்திரை தொடங்கினார். பத்ம விபூஷண், காந்தி அமைதிப் பரிசு, மகசேசே ஆகிய ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
- தன் இறுதி மூச்சு வரை பின்தங்கிய மக்களுக்காகவே பாடுபட்டு வந்த பாபா ஆம்தே 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி தன்னுடைய 93-வது வயதில் மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1898ஆம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதி, மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர் - On December 26, 1898, Marie Curie and Pierre Curie announced their discovery of radium.
🌟1925ஆம் ஆண்டு, 26ந் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது -Communist Party of India was founded on 26th december 1925.
🌟1973ஆம் ஆண்டு, டிசம்பர் 26ந் தேதி, சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது - On December 26, 1973, the Soviet's Soyuz 13 spacecraft returned to Earth after a week-long mission.
🌟1974ஆம் ஆண்டு, டிசம்பர் 26ந் தேதி, சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது - On December 26, 1974, the Soviet's Salyut 4 spacecraft was launched into space.
🌟 1975ஆம் ஆண்டு, டிசம்பர் 26ந் தேதி, உலகின் முதலாவது வணிக-நோக்கு சுப்பர்சோனிக் வானூர்தி துப்போலெவ் டி.யு-144 சேவைக்கு விடப்பட்டது - On 26 December 1975, the world's first commercial supersonic aircraft, the Tupolev TU-144, entered service.
🌟 1893ஆம் ஆண்டு, டிசம்பர் 26ந் தேதி, மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர், பிறந்தார் - On December 26, 1893, Mao Zedong, leader of the Chinese Communist Party, was born.
🌟 1899ஆம் ஆண்டு, டிசம்பர் 26ந் தேதி, உத்தம் சிங், இந்தியப் புரட்சியாளர், பிறந்தார் - On 1899, December 26, Udham Singh, Indian revolutionary, was born.
🌟 1925ஆம் ஆண்டு, டிசம்பர் 26ந் தேதி, இரா. நல்லகண்ணு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர், பிறந்தார் - On December 26, 1925, R.Nallakannu, Indian Communist Party politician, freedom fighter, was born.
🌟 1999ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா மறைந்தார் - Shankar Dayal Sharma, the ninth President of India, passed away on 26th December 1999.
🌟 1981ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகை சாவித்திரி மறைந்தார் - On December 26, 1981, Tamil film actress Savitri passed away.
🖋I hope you may have learned little things about the following;
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://lawviasnippets.blogspot.com
- Hava a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment
Thanks for read the post.