L.S.A.act - National Legal Services Day - K.R.Narayanan, Former President of India - Sir Muhammad Iqbal, Poet & the great composer of 'Sare Jahan Se Accha' - Kaviko Abdul Rahman, Poet - Uttarakhand Formed - October 9
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "L.S.A.act - National Legal Services Day - K.R.Narayanan, Former President of India - Sir Muhammad Iqbal, Poet & the great composer of 'Sare Jahan Se Accha' - Kaviko Abdul Rahman, Poet - Uttarakhand Formed."
The Legal Services Authorities Act, 1987 :
👉Further more about Legal Services Authorities Act.
தேசிய சட்ட சேவைகள் தினம் - National Legal Services Day :
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ஆம் தேதி, தேசிய சட்ட சேவைகள் தினம், 1995 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த Legal Services Authorities Act 1987-இன் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
- இத்தினத்தில், சட்டக் கல்வி சார்ந்த முகாம்கள் நாட்டின் முக்கியமான தலைநகரங்களில் நடத்தப்படுகின்றன. ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கை சீற்றத்தால் பாதித்தவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் 1995ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அன்று இலவச சட்ட சேவையை துவக்கியது.
- இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கே.ஆர்.நாராயணன் - K.R.Narayanan - Former President of India :
- இன்று இவரின் நினைவு தினம்!
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் 1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கேரள மாநிலம், உழவூரில் பிறந்தார்.
- இவர் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்து ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றினார்.
- பின்பு 1984ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர், ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில், மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.
- இவர் 1992ஆம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1997ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.
- கடின உழைப்பும், திறமையும் இருந்தால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த கே.ஆர்.நாராயணன் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ந் தேதி (இன்று) மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
Sir Mohammed Iqbal - Renowned Poet |
🌟 1877ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி 'சாரே ஜஹான் ஸே அச்சா" பாடலை இயற்றிய மகத்தான படைப்பாளி, சர் முகமது இக்பால் பாகிஸ்தானிலுள்ள சியால்கோட்டில் பிறந்தார் - On 9th November 1877 Sir Muhammad Iqbal, the great composer of 'Sare Jahan Se Accha', was born in Sialkot, Pakistan.
👉Click here to buy Muhammad Iqbal Collections
🌟 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தமிழ் கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்தார் - Tamil Poet Kaviko Abdul Rahman was born on November 9, 1937.
👉Click here to buy Kaviko Abdul Rahman Collections
🌟 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உத்தராஞ்சல், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது - On 9 November 2000, Uttaranchal (Uttarakhand Formed) was separated from the Indian state of Uttar Pradesh.
L.S.A.act - National Legal Services Day - K.R.Narayanan, Former President of India - Sir Muhammad Iqbal, Poet & the great composer of 'Sare Jahan Se Accha' - Kaviko Abdul Rahman, Poet - Uttarakhand Formed.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.